சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை !
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அண்ணாநகர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், பல்லாவரம்,கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது
மேலடுக்கு சுழற்சி லட்சத் தீவு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வானம் மேகமூட்டத்துடன், மாலையில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்தது. சில இடங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது.
கோடம்பாக்கம், விருகம்பாக்கம், எழும்பூர், வடபழனி, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. எதிர்பாராமல் பெய்த கனமழையினால் முன்னெச்சரிக்கை இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தவாறு சென்றனர். சிலஇடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனத்தில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications