கைவிட்ட பேருந்துகள்... கைகொடுத்த ரயில்கள் - மெட்ரோ ரயிலில் அலைமோதும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

Heavy Rush in chennai Metro and suburban Trains

பேருந்துகள் சரிவர இயங்காததால், சென்னையில் வார நாட்களைப் போலவே இன்றும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. வழக்கமாக கூட்டம் குறைவாக இருக்கும் மெட்ரோ ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பேருந்துகள் இயங்ககாததால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மக்கள் பெரும்பாலும் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களிலேயே அதிகம் பயணம் செய்து வருகின்றனர்.

வழக்கமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கபடும். ஆனால், தற்போதையை நிலையைக் கருத்தில் கொண்டு, வார நாட்களைப் போன்றே இன்றும் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், கூடுதலாக 13 லட்சத்து 69 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. மின்சார ரயில் போன்று மெட்ரோ ரயிலிலும் பயணிகள் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hevay Rush in Chennai Metro and Suburban trains due to Transport workers strike. Transport workers are demanding hike in their regular wage and they are protesting for past three days.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற