Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த 3 வயது குழந்தை அவ்ஜித் புற்றுநோயிலிருந்து மீள உதவிக்கரம் நீட்டுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த 3 வயது குழந்தை அவ்ஜித் புற்றுநோயிலிருந்து மீள உதவிக்கரம் நீட்டுங்கள்!

"ஒரு கற்பனையாக உங்களுடைய சொந்த 3 வயது குழந்தை காலையில் எழுந்து இருக்கும்போதே இரத்த வாந்தியுடனும், உடல் முழுவதும் வியர்த்து விறுவிறுப்புடனும் காணப்பட்டால் என்ன செய்வீர்கள்".

கண்டிப்பாக உடைந்து போய்விட மாட்டீர்களா? அப்படித்தான் ஒவ்வொரு நாளும் நான் உடைந்து போய்க் கொண்டு இருக்கிறேன். ஆமாம் என் மகன் வலி மிகுந்த இரத்த புற்றுநோயால் பாதிப்படைந்து வருகிறான். நான் என்னுடைய வேலை இப்படி எல்லாவற்றையும் இழந்து அவனுடைய சிகச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு 1800 கி. மீ வரை பயணம் செய்து போய் வருகிறேன் என்று கலங்குகிறார் அவ்ஜித் அப்பா.

அர்ச்சனா மற்றும் அவரது கணவர் இருவரும் கல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்ஜித் இப்பொழுது தான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி உள்ளான். அவனுக்குப் பிடித்தமான புத்தகங்கள், ஸ்கூல் பேக், கலர் பென்சில்கள் எல்லாவற்றையும் அவனுக்காக வாங்கி வைத்து விட்டோம். ஆனால் எங்கள் கனவு, ஆசைகள் எல்லாம் கலைந்து விட்டது. ஆமாம் அவன் கொஞ்சம் கொஞ்சமாக எடையை இழக்க ஆரம்பித்தான்.

இந்த கடுமையான வெயில் காலத்திலும் ஒரு நாள் அவன் மிகவும் குளிருது என்றான். படுக்கை விரிப்பில் முடங்கிப் போயே கிடந்தான். கடுமையான காய்ச்சலால் அவனது உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. அடுத்த நாள் காலையில் அவன் படுக்கை, தலையணை முழுவதும் இரத்தக் கறைகள் படிந்து கிடந்தது. அவன் மூக்கில் ருந்து இரத்தம் தீவிரமாக கசிய தொடங்கி விட்டது. இரவு முழுவதும் வலியால் அவன் சரியாக தூங்கவும் இல்லை என்று கண் கலங்குகிறார் அவ்ஜித்தின் தந்தை.

இதைத்தொடர்ந்து எதையுமே அவனால் சாப்பிட முடியவில்லை, தீவிர வயிற்று வலி ஏற்பட்டது. அவனது பெற்றோர்கள் கல்கத்தாவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் கொடுத்த மருந்துகள் எதுவும் பலனளிக்கவில்லை. காய்ச்சல் குறையாமல் தொடர்ந்து ஒரு வாரம் அப்படியே இருந்தது.

பிறகு மருத்துவர்கள் அவனுக்கு உடனே இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதன் படி இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவனது இரத்த தட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவனுக்கு உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் அவ்ஜித்தின் உடல் நிலையை முன்னேற்றவில்லை.

இறுதியாக நாங்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் படி பரிந்துரை செய்தனர். இதற்காக கல்கத்தாவில் இருந்து 1800 கி. மீ வரை பயணம் செய்தோம். என் மகன் எனக்கு உயிருடன் கிடைத்தால் அதுவே போதும். அங்கே அனுமதித்த பிறகு அவனுக்கு நிறைய இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தான் அவனுக்கு லுகோமியா என்ற இரத்த புற்று நோய் இருப்பது பரிசோதனை யில் தெரிய வந்தது. அவனது இரத்த செல்கள் பெரும்பாலும் இறந்து விட்டது. கீமோதெரபி சிகிச்சை மட்டுமே அவனது உயிரைக் காப்பாற்றும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எங்களுக்கு வேற வழியில்லை, அவனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும். இந்த சிகச்சைக்கு 15 லட்சம் வரை தேவைப்படுகிறது. ஏற்கனவே நாங்கள் 2 லட்சம் வரை மருந்து மாத்திரைகள், பரிசோதனைக்காக செலவழித்து விட்டோம். மேலும் கல்கத்தாவில் இருந்து அடிக்கடி எங்களால் பயணமும் செய்து வர முடியாது. இதனால் நாங்கள் சென்னைக்கு மருத்துவமனை அருகிலேயே குடிபெயர்ந்து விட்டோம். எனக்கு இங்கே மொழியும் தெரியாது, வேலையும் இப்பொழுது இல்லை, என்னால் முடிந்தவரை முயன்று வருகிறேன் என்று தன் நிலையை எடுத்து கூறி வருகிறார் அவ்ஜித் தந்தை.

அவர்கள் அவ்ஜித்தின் செலவுக்காக கடன் வாங்கி செலவழித்து வருகிறார்கள். மாதம் மாதம் அதற்கு வட்டியும் கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

உதவுங்கள்

இரத்தப் புற்று நோயால் பாதிப்படைந்த நிலையிலும் அவ்ஜித் தைரியமாக போராடி வருகிறான். அவனது உயிரை கீமோதெரபி சிகச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். அதற்கான பணத்தை திரட்ட இந்த குடும்பம் போராடி வருகிறது. உங்கள் உதவியை நாடி வந்துள்ளார்கள். நீங்கள் மனித நேயத்துடன் செய்யும் சிறு உதவி ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும். கடவுளோடு கைகோர்த்து நாமும் இந்த குழந்தையைக் காப்பாற்ற உதவிக் கரங்களை நீட்டுவோம். இந்த தந்தையின் கனவுகளை மீட்டுக் கொடுப்போம். இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இதைப் பற்றி கூறுங்கள். இதுவும் நீங்கள் செய்யும் சிறிய உதவியே.

வாருங்கள் உயிர் காக்க மனித நேயத்துடன் உதவி செய்வோம்.

இவர்களுக்கு உதவி செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+