குறைமாதத்தில் பிறந்து உயிருக்கு போராடும் பிஞ்சு குழந்தை.. உதவி செய்ய வாருங்கள்!

புதிதாக பிறந்த தன் பிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வர ஒரு தந்தைக்கு உதவுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக பிறந்த தன் பிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வர ஒரு தந்தைக்கு உதவுங்கள்.

எல்லோருக்கும் முதல் குழந்தை பிறந்தால் ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அதிலும் ஒரு தாயை விட, ஒரு தந்தையாக ஒரு ஆண் அடையும் ஆனந்தம் எல்லையில்லாதது. தன் பிஞ்சு குழந்தையை கைகளில் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்றே ஒவ்வொரு அப்பாக்களும் காத்து கிடப்பார்கள். அப்படித்தான் இந்த பெற்றோர்களும் தவமாய் தவம் இருந்தனர்.

Help this Child, Who gets admitted seriously in Hospital

கே. சிவா மற்றும் மனைவி சாய் பிரியா இருவருக்கும் இந்த வருடம் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரு அழகிய தேவதை போல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. எல்லோரிடமும் தங்கள் புன்னகையின் மூலம் செய்தியை தெரிவித்து கொண்டாடினர். ஆனால் அந்த புன்னகை கொஞ்சம் நேரம் கூட நிலைக்க வில்லை. குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

ஏழு மாதத்திலேயே குழந்தை பிறந்து விட்டதால் அந்த பிஞ்சு குழந்தையை மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களின் செல்லக் குழந்தை ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அடிக்கடி வலியால் கதறி கதறி அழுது கொண்டே இருக்கிறது. குழந்தையின் தோலும் வெளிரிய நிறத்துடன் காணப்படுகிறது. குழந்தையின் உடல் எடையும் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

Help this Child, Who gets admitted seriously in Hospital

குழந்தை பிறப்பதற்கு முன்பாக சிவாவின் மனைவி சாய் பிரியா சில உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஒரு நாள் இரவு அவர் மிகவும் மூச்சு விட சிரமப் பட்டார். சிவா ஏர்செல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவியை உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார். சாய் பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் இல்லையென்றால் குழந்தைக்கும் தாயின் உயிருக்கும் ஆபத்து என்றனர்.

உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விட்டனர். சாய் பிரியா இயல்பான நிலைக்கு வந்து விட்டார். ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து மறுபடியும் குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட்டது. குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை, குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து வென்டிலேட்டரில் வைத்தனர். தன் பிஞ்சு குழந்தையை அரவணைத்து தொட்டால் கூட அது ஏங்கி ஏங்கி அழத் தொடங்கி விடுகிறது. வேதனையால் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டேயிருக்கிறது.

Help this Child, Who gets admitted seriously in Hospital

தன்னுடைய மனைவியையும் குழந்தையும் இந்த நிலையில் மருத்துவமனையில் விட்டு விட்டு செல்ல சிவாவால் வேலைக்கு கூடச் செல்ல முடியவில்லை. அவருடைய வேலையையும் அவர் இழந்து விட்டார். ஒரு மாதத்திற்கு 15,000 வரை வருமானம் ஈட்டி வந்தார். இது அவரது சிறிய குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தாலும் அவரால் நீண்ட நாள் மருத்துவனையில் இருக்கும் தன் குழந்தையின் மருத்துவ செலவுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

குழந்தையின் சிகிச்சைக்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று எல்லோருடைய உதவியும் நாடி பண உதவியை பெற்றுள்ளார். மே மாதம் வரை அவரின் மருத்துவமனை செலவு 4.5 லட்சம் ரூபாய் ஆகும். அவரின் மனைவியின் நகை, வீட்டில் உள்ள பொருட்கள் என்று எல்லாவற்றையும் விற்றும் அவரால் போதிய பணத்தை திரட்ட முடியவில்லை. இருப்பினும் இருவரும் தங்கள் குழந்தையைக் காப்பாற்றப் போராடி வருகிறார்கள். "எங்கள் குழந்தையை நாங்கள் எப்படியாவது மீட்டிடுவோம்.

கண்டிப்பாக மருத்துவமனையில் இருந்து எங்கள் தேவதையை வீட்டிற்கு அழைத்துச் செல்வோம். எங்களின் உலகம் அவள் தான். அவளுக்காகத் தான் நாங்கள் வாழ்கிறோம். அவள் படும் கஷ்டத்தை எங்களால் பார்க்க கூட முடியவில்லை. இருப்பினும் கடவுளை நம்பி வருகிறோம். ஒரு தாயாக தந்தையாக ஆன பிறகு எங்களால் சந்தோஷம் அடைய முடியாமல் போனால் கூட அவளை காப்பாற்ற நாங்கள் போராடுவோம்". என்று தங்கள் மனநிலையை தெரிவிக்கின்றனர்.

Help this Child, Who gets admitted seriously in Hospital

என் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் மீட்டெடுக்க 8 லட்சம் வரை அவள் மருத்துவ செலவுக்கு தேவைப்படுகிறது. இருப்பினும் நம்பிக்கையை விடாமல் தங்கள் தேவதையை வீட்டிற்கு ஒரு நாள் கொண்டு சென்று விடலாம் என்று ஏங்கி வரும் அந்த பெற்றோர்க்கு உங்கள் உதவிக் கரத்தை நீட்டுங்கள்.

Help this Child, Who gets admitted seriously in Hospital

நீங்கள் செய்யும் சிறிய உதவி ஒரு குழந்தையை மட்டும் காப்பாற்ற போவதில்லை. அந்த பெற்றோரின் வாழ்க்கையையும் புத்துயிர் கொடுக்கப் போகிறது. அவர்களின் செல்லக் குழந்தையை உயிருடன் மீட்டுத் தர உதவுங்கள். நம் உதவி மற்றவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தமாகட்டும். இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வாட்ஸ் அப், முகநூல் மூலம் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள். இதுவும் ஒரு சிறிய உதவி தான்.

உதவுங்கள் ஒரு உயிர் காக்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+