For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலகாரம் முதல் பட்டாசுவரை ஜிஎஸ்டி.. காஸ்ட்லியான தீபாவளி!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்கு எந்த பொருளுக்கு எவ்வளவ வரி கட்டி இருக்கிறீர்கள் தெரியுமா மக்களே.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பலகாரம் முதல் பட்டாசுவரை ஜிஎஸ்டி.. இது காஸ்ட்லியான தீபாவளி!-வீடியோ

    சென்னை : ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் கொண்டாடப்படும் முதல் தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் எவ்வளவு வரி கட்டி இந்த பண்டிகையை காஸ்ட்லியானதாக கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

    நரகாசுரனை, கிருஷ்ணர் வதம் செய்த தினத்தைத் தான் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். நரகாசுரன் என்னும் தீய சக்தி அழிந்து நன்மை பிறந்ததை கொண்டாடும் விதமாக அன்றைய தினம் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பலகார பட்சணங்கள் செய்து கடவுளை வழிபடுகிறோம்.

    மனிதனின் வாழ்வில் இருள் விலகி ஒளி பரவும் நாளாக தீபாவளியன்று விளக்கேற்றி, மத்தாப்பு கொளுத்தி வெளிச்சத்தை கொண்டு வருகிறோம். குழந்தைகள் குதூகலிக்கும் இந்த பண்டிகையில் அவர்களுக்கு எப்பாடுபட்டாவது மகிழ்ச்சியைத் தருவதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

     ஜவுளிக்கு 5 முதல் 12 சதவீத வரி

    ஜவுளிக்கு 5 முதல் 12 சதவீத வரி

    ஆனால் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் கொண்டாடப்படும் இந்த ஆண்டு தீபாவளி காஸ்ட்லி பண்டிகையாகத் தான் அமைந்திருக்கிறது. துணிக்கடைகளில் இதுவரை சதவீதம் மதிப்புக் கூட்டு வரியாக சதவீதம் வரி கட்டி வந்தோம். இந்த முறை ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஆடைகளுக்கு சதவீதமும், ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ஆடைகளுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி வரியாக கட்டி இருக்கிறோம்.

     மகிழ்ச்சிக்காக செலவு

    மகிழ்ச்சிக்காக செலவு

    புத்தாடைக்கு அடுத்த படியாக பலகாரக் கடைக்கு போனால் அங்கும் வரி பிராண்டுகிறது. இனிப்புகளுக்கு சதவீத வரி, மற்ற பலகாரங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி. சரி மனிதன் சம்பாதிப்பதே சந்தோஷமாக வாழத்தானே என்று நினைத்து மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

     பட்டாசுக்கு அதிக வரி

    பட்டாசுக்கு அதிக வரி

    புத்தாடை, இனிப்பு வாங்கியாச்சு அடுத்தது என்ன பட்டாசு தான். இதற்குத் தான் அதிகப்படியான ஜிஎஸ்டி, வரியை குறைக்க வேண்டும் என்று பட்டாசு ஆலைகள் வலியுறுத்திய போதும் கண்டுகொள்ளவில்லை அரசு. இதனால் இப்போது மக்கள் அதிகப்படியாக 28 சதவீத ஜிஎஸ்டி வரி கட்டி பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

     சினிமா டிக்கெட்டிற்கும் வரி

    சினிமா டிக்கெட்டிற்கும் வரி

    அதிகாலையில் இறை தொழுகை முடிந்து, பலகார பட்சணங்கள் சாப்பிட்ட பின்னர் மக்கள் நாடிச் செல்வது புதுப்படங்களைப் பார்க்க. அதற்கும் நாம் இரண்டு வரி கட்டுகிறோம். மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க ஜிஎஸ்டி வரியாக 28 சதவீதம், மாநில அரசு வரியாக 8 சதவீத வரி என ஆக மொத்தம் ரூ. 204 கொடுத்து தான் படம் பார்க்க முடியும்.

     பட்ஜெட்டில் துண்டு

    பட்ஜெட்டில் துண்டு

    இப்படி அனைத்திலும் வரியைக் கட்டிவிட்டு தான் மகிழ்ச்சிகரமானதாக இந்த தீபாவளியைக் கொண்டாட மக்கள் முயற்சிக்கின்றனர். இந்த ஆண்டு பண்டிகைக் கொண்டாட்டத்தில் மிகப்பெரிய துண்டாகவே பட்ஜெட்டில் விழுந்தாலும், இழுத்துப் பிடித்து அவரவர் வசதிக்கேற்ப தீபாவளியை கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

    English summary
    After GST impelmentation this Diwali turns costlier celebration for people from dresses to cinema tickets, this reflects on their budget.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X