For Daily Alerts
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எதுக்கு பாதுகாப்பு என விமர்சனம் - கனிமொழி மீது புகார்
சென்னை: திருச்சி மாநாட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியை விமர்சித்ததாக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா என்பவர், இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 06ம் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில், திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் எதற்கு அவருக்கு காவல் என திமுக எம்.பி. கனிமொழி கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் சுமார் 150 கோடி இந்துக்களின் மனதை புண்பட்டுவிட்டதாகவும், பக்தர்களுக்கு இந்த கருத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.