For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனமழை: குமரி, நெல்லை, திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழையால் கன்னியாகுமரி உட்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

By Madhivanan
Google Oneindia Tamil News

குமரி/நெல்லை: கனமழை தொடருவதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

kumari rain

இன்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல இடங்களில் கனத்த மழை இன்றும் நீடிக்கிறது. தென்மாவட்டங்களில் பல இடங்களிலும் கனமழை வெளுக்கிறது.

இதையடுத்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை தொடருவதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
A holiday has been declared for schools and colleges in Kanyakumari district on Thursday following heavy rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X