For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டம்.. கடும் கட்டுப்பாடுகளை விதித்தது சென்னை போலீஸ்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றன. 2017 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு சென்னை மாநகரக் காவல்துறை பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி என்ற பெயரில் கொண்டாட்டங்கள் இடம் பெறும். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதில், பலர் மது அருந்தி அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக காவல்துறை மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது.

 Hotel, clubs new year celebrations wind up by 1 am.

இந்நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டங்ககளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க சென்னை காவல்துறை கெடுபிடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

* நட்சத்திர ஓட்டல் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

* அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது வகைகளை பரிமாறக் கூடாது. குறிப்பாக நடன நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மது வகைகளை பரிமாற அனுமதியில்லை.

* நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.

* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

* நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

* மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.

* நிர்வாகத்தினர், கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வெடி போடுவது கூடாது.

*கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் கடலுக்கு அருகில் செல்ல கூடாது.

* விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

English summary
The city police has issued directions to hotels and clubs in Chennai, hosting special programmes on New Year's eve, to wind up celebrations by 1 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X