வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ 4 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்! வாணியம்பாடியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாணியம்பாடி: வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரது வங்கி கணக்கு முடக்கியதால் வேதனை அடைந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பாபு நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் சையத் காதர். இவருடைய மனைவி யாஸ்மின்(33). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

House maid

இவருக்கு 1 மகள், ஒரு மகன் என 2 பிள்ளைகள் உள்ளன. இவர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆட்டோ மற்றும் கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் யாஸ்மினுக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது.

அதில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் டி.வி.எல் யாஸ் டிரேடர்ஸ் என்று பெயரில் நிறுவனம் நடத்தி 2024-25 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வரி 4 கோடியை 75 லட்சத்து 12 ஆயிரத்து 662 ரூபாய் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது.

இதன் காரணமாக வங்கி கணக்கும் முடக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் யாஸ்மின். மேலும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி போலி வரி ஏய்ப்பு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஏழை எளிய மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி ஜி.எஸ்.டி மோசடி நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+