• search

பிரசவத்தின் போது போடும் ஊசிகள்... இந்த "கிரிமினல்கள்" கைக்கு எப்படி கிடைத்தது?

By Lakshmi Priya
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   இதுவும் விளையாட்டு என கூறி சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்

   சென்னை: பிரசவத்தின்போது மயக்கத்துக்காக போடப்படும் ஊசிகள் சாதாரண அபார்ட்மெண்ட் லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் கைக்கு சென்றது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

   நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகள் என்று வித்தியாசம் இன்றி பெரும்பாலான காமக் கொடூர காட்டுநாய்கள் வேட்டையாடிக் கொண்டேதான் இருக்கின்றனர். சிறுமிகளுக்கு என்னதான் குட் டச், பேட் டச் என சொல்லிக் கொடுத்தாலும் இந்த கயவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

   இதற்கு ஒரு உதாரணம்தான் சென்னை அயனாவரத்தில் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம். அயனாவரம் செகரடேரியட் காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 300 வீடுகள் உள்ளன. தனியார் நிறுவனத்தை சேர்ந்த 50 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

    நாசம்

   நாசம்

   இதில் 66 வயது கொண்ட லிப்ட் ஆபரேட்டர் ரவி என்பவன் லிப்டில் பள்ளிக்கு சென்று வரும் காது கேளாத வாய் பேச இயலாத மாணவியை 8-ஆவது மாடிக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளான். இதையடுத்து இந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியது இவனுக்கு சாதகமாக அமையவே மற்ற கயவர்களையும் அழைத்து சிறுமியை நாசம் செய்ய வைத்துள்ளான்.

    மயக்க மருந்து

   மயக்க மருந்து

   சிறுமிக்கு வலி தெரியக் கூடாது என்பதற்காக பிரசவத்துக்கு போடும் ஊசியை பயன்படுத்தியுள்ளதாக திடுக் தகவல்கள் கிடைத்தன. இந்த ஊசி சாதாரண வேலை செய்யும் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதே கேள்வியாகும்.

    ஊசியை கொடுத்தது

   ஊசியை கொடுத்தது

   அப்படியென்றால் இந்த விவகாரத்தில் பெரிய டீமே செயல்பட்டுள்ளதா. மருந்து கடைகளுக்கு ஏதேனும் தொடர்பா, சாதாரண ஸ்லீப்பிங் மாத்திரையை கூட டாக்டர் பரிந்துரை சீட்டு (பிரிஸ்கிரிப்ஷன்) இல்லாமல் கொடுக்க மறுக்கும் மருந்தாளுனர்கள் இத்தகைய மயக்க ஊசியை கொடுத்தது எப்படி?

    வெறி நாய்

   வெறி நாய்

   இல்லாவிட்டால் இவன்கள் பணிபுரியும் நிறுவனம் சிறிய மருத்துவமனையையும் பணிக்காக ஒப்பந்தம் எடுத்திருந்து, அங்குள்ள இவர்களின் நண்பர்கள் மூலம் ஊசியை பெற்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் இவர்கள் போதை ஊசியையும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே இந்த 17 பேரும் வேறு எங்கெல்லாம் அக்கிரமம் செய்தனர் என்பதை போலீஸார் விசாரிக்க வேண்டும். எது எப்படியோ இந்த விவகாரத்தில் ஊசி கொடுத்தது முதல் அனைத்து விவகாரங்களையும் தீர விசாரித்து இதுபோன்ற வெறிநாய்களை ஒழிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   How does the lift operator Ravi and his associates gets the local anesthetic injection when Doctors use for baby delivery purpose.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more