கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? MGM வெளியிட்ட மருத்துவ அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது என எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு லேசான மூச்சுத்திணறல் காரணமாக எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

vs babu chennai

அவரது உடல்நிலையை பலதுறை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் மூச்சுத்திணறலை சரி செய்வதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. எனினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். கூட்டத் தொடர் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

vs babu chennai

இந்த நிலையில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு நேற்று இரவு திடீரென லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

யார் இந்த வி.எஸ்.பாபு?

வடசென்னை பகுதியை சேர்ந்தவர் வி.எஸ்.பாபு. இவரது தந்தை வி.சுந்தரம்பிள்ளை. பாபு, வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரப்பிள்ளை பள்ளியில் படித்தவர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 2011 ஆம் ஆண்டு ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட போது, அந்த தொகுதியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தவர் வி.எஸ்.பாபு. ஆனாலும் வாக்கு வித்தியாசம் குறைந்ததை அடுத்து வி.எஸ்.பாபு, வடசென்னை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து 2016ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். திமுகவில் இருந்த போதே அதிமுகவில் இருந்த சேகர்பாபுவுக்கு போட்டியாகவ இருந்தார். இந்த நிலையில் அதிமுகவிலும் அவருக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என கூறி, அவர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

இதையடுத்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் , முதல்வராக இருந்த ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். இந்த தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வி.எஸ்.பாபு காட்டிய ஃபினிஷ்டு சைகை வைரலானது.

வி.எஸ்.பாபு அயனாவரம், ஐசிஎஃப்,ஜமாலியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் மக்களால் நன்கு அறியப்பட்டவர். நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் கூட கொளத்தூர் தொகுதி வெற்றி கொத்து பரோட்டா என்றெல்லாம் பேசப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+