கழுத்தை சுற்றி கவர் பண்ணுங்க.... செயின் பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பலே ஐடியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செயின் பறிப்புக் கொள்ளையரிடமிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?' என்பது போன்ற புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

பெண்களே! உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில் செயின் பறிப்பு கொள்ளையர்களை ஒழிப்பது கடினம். பொது இடங்களில், சாலைகளில், பேருந்துகளில் என குற்ற செயல்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் காவல்துறை கண்காணித்து குற்றத்தை தடுக்க வேண்டும் என்பது இயலுமா?
ஆக மேற்கண்ட இடங்களிலும், சாலைகளிலும் நீங்கள் நடந்து செல்லும் போதோ, இருசக்கர வாகனத்தில் செல்லும் போதோ, மதிப்பு மிக்க உங்கள் கழுத்திலுள்ள நகைகள் கொள்ளை போகாமல் பாதுகாத்து கொள்ள இந்த படங்களிலுள்ளது போன்ற எழிய வழிமுறையை தயவு செய்து பின்பற்றி பாருங்கள்.

How to safe Chain Snatchers viral photos

நீங்கள் இனிவரும் காலங்களில் அணியும் உடைக்கு ஏற்ப அதற்கு பொருத்தமான கைக்குட்டை அளவு துணியை கழுத்தில் அணிவதை புதிய நாகரீகமாக உருவாக்குங்கள் என்று பதிவிட்டு போட்டோக்களை அனுப்பி வருகின்றனர்.

How to safe Chain Snatchers viral photos

தமிழகம் முழுவதும் செயின் பறிப்பு திருடர்கள் அதிகரித்து விட்டனர். காலையில் வீட்டு வாசலில் கோலம் போடும் போதும், வாக்கிங் செல்லும் போதும், அலுவலகம் செல்லும் போதும் பெண்கள் கழுத்தில் நகையை போட்டு நடந்து செல்ல முடியவில்லை. நகை பறிப்பு திருடர்கள் பெண்களின் கழுத்தில் கை வைத்து நகைகளை அறுத்து எடுத்து செல்கின்றனர்.

How to safe Chain Snatchers viral photos

நகை பறிப்பு கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கவே இது போன்ற கர்ச்சிப் கட்டிக்கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுத்து அதை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார் ஒரு பெண்மணி. இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

How to safe Chain Snatchers viral photos

சேலைக்கு மேட்ச் ஆக கர்ச்சிப் கழுத்தில் கட்டிக்கொண்டால் நகைகளை ஈசியாக யாரும் திருட முடியாது. திருவிழா காலங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினர் முந்தானையால கழுத்தை மூடிக்கங்க என்று அட்வைஸ் செய்வார்கள். கழுத்தில் இருக்கும் நகை டிசைனை பார்க்க வேண்டும் என்பதற்காகவே போட்டுச்செல்லும் பெண்கள்தான் அதிக அளவில் நகையை பறிகொடுக்கின்றனர். இனி இதுபோல கர்ச்சிப் கட்டிக்கொண்டால் நகை பத்திரமாக தப்பும் பெண்களே!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Women and girls are how to safe to Chain Snatchers photos are going to viral.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற