ஆபத்தான மலையேற்றத்திற்கு குழந்தைகளை எப்படி அனுமதித்தது சென்னை ட்ரெக்கிங் கிளப்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி காட்டுத்தீ...யார் காரணம்?..உண்மை என்ன?- வீடியோ

  சென்னை : மலையேற்றம் என்பது ஆபத்தான பயணம் என்பது தெரிந்திருந்தும் குரங்கணியில் 3 குழந்தைகள் எப்படி மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  ஐடி கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள் வார இறுதி நாட்களில் புத்துணர்ச்சிக்காக இயற்கை வனப்பகுதிகளை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இதற்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ட்ரெக்கிங் கிளப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

  கோடை விடுமுறை, பண்டிகை கால விடுமுறைகள் என்றால் இந்த த்ரில் சுற்றுலாவிற்கு செம கிராக்கி. இதே போன்று தான் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ட்ரெக்கிங் கிளப் பெண்களுக்கான மலையேற்ற த்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

  மலையேற்றத்திற்கு முன்னர் செய்ய வேண்டியவை

  மலையேற்றத்திற்கு முன்னர் செய்ய வேண்டியவை

  ஆண்கள், பெண்கள் 27 பேர் மற்றும் 3 குழந்தைகளும் இந்த மலையேற்றத்திற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பொதுவாக மலையேற்றத்திற்கு செல்லும் போது அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதற்கான பரிசோதனைகள் செய்யப்படும்.

  இளைஞர்களுக்கே சிரமம்

  இளைஞர்களுக்கே சிரமம்

  மேலும் மலையேற்றம் என்பது சற்று கடினமான விஷயம் நகர வாழ்க்கையிலேயே வாழ்ந்தவர்களுக்கு கடினமாக காட்டுப்பாதையை கடப்பது மிகவும் சிரமம். இளைஞர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம்.

  காடுகள் பற்றி புரிதல் இல்லை

  காடுகள் பற்றி புரிதல் இல்லை

  காட்டு வழியாக பயணம் செல்லும் போது திடீரென வனவிலங்குகள் வந்து தாக்கலாம், அல்லது தீ விபத்து சம்பவங்கள் ஏற்படலாம். முதலில் மலையேற்றம் செல்லும் போது ட்ரெக்கிங் கிளப்புகள் தங்கள் ஏற்பாட்டின் கீழ் அழைத்து செல்பவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு ஆபத்து காலங்களில் எப்படி தப்புவது என்பதை கற்று கொடுத்திருக்க வேண்டும்.

  குழந்தைகளை அழைத்து சென்றது ஏன்?

  குழந்தைகளை அழைத்து சென்றது ஏன்?

  காட்டில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் வெளியேறுவதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு தெரிய வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக இவையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் மலையேற்றத்திற்கு குழந்தைகள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்பது தான்.

  விழிப்புணர்வு இல்லாமல்

  விழிப்புணர்வு இல்லாமல்

  இயற்கையை சுற்றி பார்ப்பதற்காக தன்னார்வலர்கள் சேர்ந்து எடுத்த முயற்சி இது என்று சொன்னாலும், சுற்றுலா அழைத்து செல்வோரின் முழு பாதுகாப்பிற்கான பொறுப்பையும் அவர்கள் தான் ஏற்க வேண்டும். இயற்கை பற்றிய சரியான புரிதல் இல்லாமல், சரியான விழிப்புணர்வு இல்லாமல் சென்னை ட்ரெக்கிங் கிளப் தன்னார்வலர்கள் மலையேற்றத்திற்கு பெண்களை அழைத்து சென்றது முதல் தவறு, அதிலும் குழந்தைகள் 3 பேரையும் எப்படி அனுமதித்தார்கள் என்பது புரியாத விஷயமாகவே இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  How the Chennai trekking club allows 3 children to Kurangani forest as it is not safe for adults itself from wild animals and forest fire?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற