புருஷனுக்கு சோறு போடாமல் டிவி பார்த்த மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!
மனைவிக்கு தீ வைத்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video

கும்பகோணம்: முன்பெல்லாம் டிவி சீரியல்கள் வந்த புதிதில் கணவன்கள் விளையாட்டாக கூறினார்கள், "சீரியல் ஆரம்பிச்சிட்டா பசின்னு வந்து புருஷனுக்கு சோறு கூட போடுவது இல்லை" என்று. கணவனுக்கு சாப்பாடு போடாத விஷயம் கூட அப்போது ஜோக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் ஒரு கணவன், அதை படு சீரியஸாக்கி விட்டு ஏடாகூடம் செய்துள்ளார்.
பட்டீஸ்வரம் அருகே முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர்கள் சிவானந்தம் - அருண்மொழி தம்பதி. சிவானந்தம் ஒரு கூலி தொழிலாளி. கல்யாணம் ஆகி 5 வருடங்களான இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் சிவானந்தம் தண்ணி அடிப்பவர் போல. தினமும் மது அருந்திவிட்டுத்தான் வீட்டுக்கு வருவாராம் அப்படித்தான் சம்பவத்தன்று தள்ளாடியபடியே வந்துள்ளார்.

அருண்மொழி டிவி பார்த்து கொண்டிருந்திருக்கிறார். "பசிக்குது.. சாப்பாடு போடு" என்று சிவானந்தம் சொல்ல, டிவியிலேயே மூழ்கி கிடந்த அருண்மொழிக்கு இது காதிலேயே விழவில்லை. சிவானந்தம் வீட்டுக்கு வந்ததும், சாப்பாடு கேட்டதும்கூட தெரியாமல் டிவியையே ரசிச்சு பார்த்து கொண்டிருந்தார். ஏற்கனவே போதை தலைக்கேறிய இருந்த சிவானந்தத்திற்கு இப்போது ஆத்திரமும் சேர்ந்து ஏறியது.
உடனே, வீட்டில் பாட்டிலில் கிடந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது வாயில் ஊற்றி கொண்டார். சிவானந்தம் தற்கொலைக்கு முயன்றுவிட்டார் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. வாய் நிறைய மண்ணெண்ணையை வைத்து கொண்டு, பின்னர் ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகத்திலே பொளிச்சென்று கொப்பளித்தார்.
இப்போது அருண்மொழி முகம், தலை, கழுத்து, தோள்பட்டை என தீ பிடித்து அலறினார். வலியால் கதறினார். மனைவி துடிப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிவானந்தம் பயந்துகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இப்போது தீவிர சிகிச்சையில் அருண்மொழி இருக்கிறார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications