நான் ஊழலுக்கு எதிரானவன்- கட்சி, நட்பு, குடும்ப பேதம் கிடையாது: கமல் மீண்டும் டுவிட்டர் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல் அடிக்கடி டுவிட்டர் பக்கத்தில் ஊழலுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார். இது தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நடிகர் கமல் சற்று நேரத்தில் முன், இரண்டு டுவிட்டர் பதிவுகளை போட்டுள்ளார். "என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்" என்று கூறியிருக்கிறார்.

I am against corruption, Kamal twits

அதே போன்று, நான் ஊழலுக்கு எதிரானவன் என்றும் ஒரு கட்சிக்கு எதிராக நான் போராடவில்லை என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். புரட்சியாளர்களுக்கு எதிராக தான் கிளர்ந்தெழுந்துள்ளதாகக் கூறும் கமல், மரணம் அல்லது தோல்வியைக் கண்டு அஞ்சவில்லை என்றும் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசை ஊழல் அரசாகக் கூறும் கமல், திமுக ஆட்சியில் இருந்த போது விமர்சித்தாரா என்ற கேள்வி அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கமல் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I am against corruption, said Kamal on his twitter page today.
Please Wait while comments are loading...