For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே. நகரில் போட்டியிடக் கூடாது.. கூலிப்படை மூலம் மிரட்டல்'.. தியானம் இருந்த தீபா குற்றச்சாட்டு

ஆர்.கே. நகரில் போட்டியிடக் கூடாது என்று கூலிப்படை மூலம் மிரட்டல்விடப்படுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திடீர் அரசியலில் குதித்த ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவிற்கு கூலிப்படை மூலம் மிரட்டல் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. ஜெயலலிதா மறைந்ததால் காலியான இந்த இடத்தில் அவரது அண்ணன் மகள் தீபா அறிவித்தார்.

இந்நிலையில், திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா திடீரென ஓபிஎஸ் பாணியில் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை ஜெயலலிதா நினைவிடம் முன்பு வைத்து தியானம் செய்தார்.

கூலிப்படை மிரட்டல்

கூலிப்படை மிரட்டல்

பின்னர், செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது: நான் ஆர்.கே. நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்ததில் இருந்து என்னை கூலிப்படை மூலம் மிரட்டுகின்றனர். பல சதிகளை தீட்டி வருகின்றனர். சொந்த அண்ணனின் மகளான என் மீது எனது அத்தை எனக்கு பெயரிட்டு குழந்தையைப் போல் பராமரித்து வந்தார். எனக்கும் அவருக்கும் ஒரு தாய்க்கும் மகளுக்குமான நெருக்கமும் பாசமும் பந்தமும் உள்ளது.

விரைவில் உண்மை வெளியே…

விரைவில் உண்மை வெளியே…

இவர் யார் அதை குறை கூறுவதற்கு அல்லது இவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது. இதெல்லாம் போதாதென்று அரசியல் சாயமும் பூசுகின்றனர். இவர்களுக்கு நல்ல பதிலை தமிழக மக்கள் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நான் இங்கே வந்தேன். இவர்களைப் பற்றிய பல உண்மைகளை வெளியே வரும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அச்சம் இல்லை..

அச்சம் இல்லை..

யாரும் எனக்கு நேரடியாக எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் மறைமுகமாகவே தொல்லை கொடுத்து வருகின்றனர். எனக்கு பாதுகாப்பை கொடுக்க வேண்டிய அளவிற்கு எந்த அச்சமும் இல்லை. ஆனால், இவர்களைப் பற்றி நிச்சயமாக வெளியே தெரிவிக்க வேண்டும்.

சசிகலா முதல்வரா..

சசிகலா முதல்வரா..

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் டிடிவி தினகரன், சசிகலாதான் முதல்வர் பதவிக்கு உரியவர் என்று சொல்கிறார். இவரை எப்படி முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். முதலில் போட்டியிட்டு பிறகு முதல்வராக அப்போதாவது அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்று தீபா கூறினார்.

English summary
I am threatened by Mercenary, said Jayalalithaa’s niece Deepa at Marina.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X