நான் எப்பவுமே எங்க அம்மா மாதிரி ஆகமாட்டேன்: சொல்வது குஷ்புவின் மகள்
சென்னை: தனது அம்மா குஷ்பு வழியில் தானும் நடிகையாகப் போவது இல்லை என்று அவந்திகா சுந்தர் தெரிவித்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவரது மகள் அவந்திகா, அனந்திதா ஆகியோர் தான் உலகம். இதை நாங்கள் கூறவில்லை அவரே பலமுறை தெரிவித்துள்ளார். குஷ்புவின் மூத்த மகளான அவந்திகாவின் வயது என்ன என்றும், அவர் நடிக்க வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவரிடம் க்ரிஷ் என்பவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
அதற்கு அவந்திகா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,

நடிப்பு
மக்களே நீங்கள் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நான் நடிக்க விரும்பவில்லை.

ஓய்ந்துவிட்டேன்
எப்பொழுது நடிக்கத் துவங்குவீர்கள், நீங்கள் உங்களின் தாயின் வழியில் தான் செல்வீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்பதை கேட்டு கேட்டு ஓய்ந்துவிட்டேன். எதற்கும் லிமிட் உள்ளது. அதை சிலநேரம் மக்கள் தாண்டிவிடுகிறார்கள்.

எழுத்தாளர்
எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. நான் அழகானவள். நான் ஏற்கனவே சில முறை கூறியுள்ளேன், தற்போது மீண்டும் கூறுகிறேன், நான் ஒரு எழுத்தாளர்.

படங்கள்
யாரும் ஆரம்பிக்கும் முன்பே நானே கூறிவிடுகிறேன். படங்களுக்காக எழுதவே மாட்டேன். எனக்கு சிறுகதைகள், கவிதைகள் மற்றும் புத்தகங்கள் எழுத பிடிக்கும்.

சினிமா
நான் எப்பொழுதும் சினிமா பக்கம் வர மாட்டேன். என் முடிவை என் பெற்றோர் ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்கையில் சிலருக்கு மட்டும் அது ஏன் பிரச்சனையாக உள்ளது?

15 வயது
எனக்கு 15 வயது ஆகிறது. உதரிங் ஹைட்ஸை மறுபடியும் வாசிப்பதா அல்லது வேறு புதிய புத்தகத்தை வாசிப்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. என் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அதை என்னிடம் விட்டுவிடுங்கள்.
குழந்தை
மிஸ்டர் க்ரிஷ் நான் ஒரு குழந்தை தான் பெரியவள் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் அதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் அல்லது அவர்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிவிக்க யாருக்கும் அதுவும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இருப்பவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவந்திகா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications