ஜெ. கால்கள் வெட்டப்படவில்லை..கால் கட்டை விரல்களை நான்தான் கட்டினேன்: டிரைவர் அய்யப்பன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கால் கட்டை விரல்களை நான்தான் கட்டினேன்: டிரைவர் அய்யப்பன்

  சென்னை: ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என அவரது கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

  அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

  விசாரணை கமிஷன்

  விசாரணை கமிஷன்

  அந்த விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகுமாறு உத்தரவிடப்படுகிறது.

  கால்கள் வெட்டப்படவில்லை

  கால்கள் வெட்டப்படவில்லை

  இந்நிலையில் ஜெயலலிதாவின் ஓட்டுநரான அய்யப்பன் ஆறுமுகசாமி கமிஷனில் இன்று ஆஜரானார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என்றார்.

  கால் விரலை கட்டினேன்

  கால் விரலை கட்டினேன்

  ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுவது தவறானது. ஜெயலலிதா இறந்தப்பிறகு அவரது கால் கட்டை விரல்களை கட்டுவது போன்ற இறுதிச்சடங்குகளை நான்தான் செய்தேன்.

  ஜெ.வை பார்த்தேன்

  ஜெ.வை பார்த்தேன்

  ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற போது அவரை சந்தித்தேன். இவ்வாறு ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்தார். ஜெயலலிதாவிடம் அய்யப்பன் 10 ஆண்டுகளாக ஓட்டுநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jayalalitha driver Ayyappan apeared in the Arumugasami commission. He said that Jayalalitha's legs were not cut. he said he met Jayalalitha in the hospital. He only tied up Jayalalitha's leg.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற