ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி நான் ஒண்ணுமே சொல்லல... நடிகர் கௌதம் கார்த்திக் விளக்கம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நான் தவறாக எதையும் கூறவில்லை. அவரை சூப்பர் ஸ்டாராக தியேட்டரில் மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறேன் என்று தான் கூறினேன் என நடிகர் கௌதம் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. அப்போது பேசிய கௌதம் கார்த்திக் நான் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது போல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு விட்டன.

 I never say anything about Rajini's political entry said Gautham Karthick

ஆனால், நான் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவருடைய ரசிகராக அவரை சினிமாவில் மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறேன் என்றுதான் கூறினேன். எனக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தேசிய அரசியல் தலைவர்கள் முதல் சினிமாவில் வளரும் நடிகர், நடிகைகள் வரை தினம் ஒரு கருத்தை சொல்லி வருகின்றனர். ஆனால் அரஜினி தான் இன்னும் தீர்க்கமான முடிவை சொல்லாமல் எல்லாரையும் வழக்கம்போல்குழப்பி வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I never comment on Rajini's political entry and i just said that i would like to see super star Rajini in theaters explained Gautham Karthick
Please Wait while comments are loading...