அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமில்லை - ராகவா லாரன்ஸ்

Subscribe to Oneindia Tamil
  அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இல்லை-லாரன்ஸ்- வீடியோ

  சேலம்: அரசியலுக்கு வர வேண்டும் என்கிற தற்போது எண்ணம் இல்லை . ரஜினிகாந்த் என்ன செய்தாலும் அவருக்கு துணையாக இருப்பேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் சேலத்தில் ரசிகர்களிடத்தில் பேசுகையில் தெரிவித்து உள்ளார்.

  ரசிகர்கள் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும், தானே ரசிகர்கள் இருக்கும் இடத்தை தேடி சந்திக்க வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.

  I will support Rajini always says Actor Raghava Lawerance

  அதன்படி, இன்று சேலத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பேசினார். அப்போது, தனக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் தற்போது இல்லை என்று குறிப்பிட்டார்.

  மேலும், அரசியல் என்றாலே ஒருவித அச்ச உணர்வு தான் மேலோங்குகிறது. அந்த அச்ச உணர்வில் இருந்து விடுபடும்போது, தான் அரசியலில் ஈடுபடுவேன் என்றும், அதுவரை ரஜினிகாந்த் அவர்களுக்கு துணையாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

  அதிதீவிர ரஜினி ரசிகரான ராகவா லாரன்ஸ் ரஜினியைப் போலவே தீவிர அரசியலில் இறங்க இருப்பதாக சமீப நாட்களாக வெளியாகி வரும் செய்தியை அவர் மறுத்து உள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  I will support Rajini always says Actor Raghava Lawerance. He also added that He has No interest in Politics now and will ever Support Rajinikanth in Politics.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற