For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசிடம் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மத்திய அரசிடம் அனுமதி

'ஆலோசகர்' ராமானுஜத்துக்கான அரசு ஆணையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் சலுகைகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு டி.ஜி.பி. அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள ஓர் அறையை ஒதுக்கியிருக்கிறார்கள். அசோக்குமாருக்கு மேல் 'சூப்பர் டி.ஜி.பி'-யாக ராமானுஜம் செயல்படுவார் என்பதைத்தான் இது காட்டுகிறது. டி.ஜி.பி அந்தஸ்திலான இந்த நியமனத்துக்கு முறைப்படி மத்திய அரசிடம் அனுமதி வாங்கப்பட்டதா என்று தெரியவில்லை.

அடுத்தது அசோக்குமார்

தற்போது புது டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அசோக்குமார்,ஹரியானாவை பூர்வீகமாகக் கொண்டவர், இவர் 1982-ம் வருட தமிழக கேடர் அதிகாரி. அசோக்குமாரை டி.ஜி.பி-யாக நியமித்து வெளியிடப்பட்ட அரசாணையில், 'தி ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ்' என்கிற ஒரு வார்த்தையும் இருந்தது. இதுவும் தற்போதைய ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குமுறலாகும்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள்

மாநிலங்களில் போலீஸ் தலைமைப் பதவியில் நியமிக்கப்படுகிறவர்கள், இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள அசோக்குமார் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க ஏதுவாக தமிழக அரசின் ஆணை பிறப்பித்துள்ளதாக கருதுகின்றனர். அசோக்குமாருக்கு இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது. ஆனால், இந்த உத்தரவின் வார்த்தைகள்படி, அவர் இரண்டு ஆண்டுகள் தொடரவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்.

பதவி நீட்டிப்பு சரியல்ல

'எந்த போலீஸ் அதிகாரிக்கு சர்வீஸ் முடிய இரண்டு ஆண்டுகள் இருக்கிறதோ... அவரை மட்டுமே மாநில போலீஸ் தலைமைப் பதவியில் நியமிக்கவேண்டும். அதை விட்டு, ஆளும் கட்சிக்கு விருப்பமானவர்களை, அவர்கள் ஓய்வுபெறுவதற்கு முந்தைய நாள் அன்று, திட்டமிட்டு தலைமைப் பதவியில் உட்காரவைத்து, அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு அதே பதவியில் நீடிக்க வைப்பது சரியல்ல. இப்படிச் செய்வதால், ஜூனியர்கள் மிகவும் சோர்ந்து போவார்கள்' என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு

அதிகாரிகள் மட்டுமல்ல எதிர்கட்சியினரும் ஆலோசகர் பதவியை ஒழிக்கவேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர். ஆலோசகர் ஒழிப்பதுடன், அப்பதவியில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பதவியில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளை ஆலோசகர்களாக நியமிப்பதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TN govt IAS and IPS officers are not happy with the govt for posting retired persons above them as advisers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X