பாஜக ஆதரவு கேட்டாலும் திமுக ஆதரவு தராது.. சொல்கிறார் திருநாவுக்கரசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவி கேட்டாலும் திமுக ஆதரவி தராது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நபரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்ப பாஜக முயற்சிப்பதாகவும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது யோகா மூலம் பாஜக மத சாயம் பூச நினைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

If BJP asks also DMK will not support in the presidential election: Thirunavukkarasar

மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு கேட்டாலும் திமுக அவர்களுக்கு ஆதரவு தராது என்றும் அவர் கூறினார். மேலும் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் நபரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்ப பாஜக முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu congress leader Thirunavukarasar said if BJP ask support for Presidential election from dmk, they will not support BJP. BJP wants to send a person from RSS to the Rashtrapathi bhavan he said.
Please Wait while comments are loading...