பலாத்கார வழக்கில் நடிகை பெயரை குறிப்பிட்ட விவகாரம்.. தேவை என்றால் மன்னிப்பு கேட்க ரெடி.. கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் பெயரை குறிப்பிட்ட விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகை மீதாக பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நடிகையின் பெயரை பகிரங்கமாக கூறியதோடு, அவரது பெயரை ஏன் சொல்லக் கூடாது என்றும் வாதாடினார்.

If you still want me to apoligize I will. No one is above law, says kamal

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம், நடிகர் கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நடிகையின் பெயரைக் கூறியது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவில், நடிகை பலாத்கார வழக்கில் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர். கடவுளை தவிர சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிப்பது போல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

காரணமின்றி யாருக்காவும், எதற்காகவும் நான் வளைந்து கொடுப்பவன் அல்ல. பெண்களை நேசிப்பவனும், அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவனும் நான்.

அவள் பெயரை கூறக்கூடாதா? என்னுடைய தாய்க்கும், மகளுக்கும் அடுத்து அவள் பெயரை கூறினேன். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If you still want me to apoligize I will. No one is above law, says actor kamalhassan.
Please Wait while comments are loading...