For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிரம்பும் கௌரவப்பள்ளி அணை... கிருஷ்ணகிரியில் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கௌரவப்பள்ளி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கௌரவப்பள்ளி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் ஓசூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெங்களூருவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று அங்கு விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டார்.

In Krsihanagiri dams are almost filled up

தொடர் மழையின் காரணமாக , ஓசூர் அருகேயுள்ள கௌரவப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அவ்வாறு அணை நிரம்பிவிட்டால் உபரி நீர் திறந்துவிடப்படும். தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், ஓசூரைச் சுற்றியுள்ள 20 கிரமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

English summary
In Krishnagiri district due to heavy rain dams are almost filled up and district administration giving warning about flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X