For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாசி நிதி நிறுவனத்திடம் ஏமாந்தோருக்கு 9% வட்டியுடன் பணத்தை திருப்பி தர வேண்டும்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருப்பூரில் பாசி நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் 45 ஆயிரம் பேருக்கு 9% வட்டியுடன் பணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாசி நிதி நிறுவனம் ரூ.1600 கோடிவரை மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனைத்தொடர்ந்து அந்நிறுவன இயக்குனர் மோகன்ராஜ், கதிவரன், குமுதவள்ளி உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாசி நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் 45 ஆயிரம் பேருக்கு பணம் வழங்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நல சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து முதலீட்டாளர்களுக்கு 9% வட்டியுடன் பணம் வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு, 2 மாதத்தில் நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள பாசியின் சொத்துக்களை விற்று பணத்தை தர வேண்டும். அங்குள்ள சொத்துக்களை விற்று, பணத்தை கொண்டு வருவதற்காக அதிகாரி நியமிக்கப்படுவர் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

English summary
Madras High court orders that in the Paazee scam, the properties should sold and repaty to victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X