சிதம்பரத்தில் விசிக தலைவர்.. திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு.. பரபரப்பு
சிதம்பரம்: சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 45 நிமிடங்கள் சோதனை நடைபெற்றது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்லை. சரியாக சொல்வது என்றால் 10 நாட்களே உள்ளது. இதனால், தேர்தல் களம் அனல் உச்ச கட்ட அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் பக்காவாக செய்து வருகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆங்கேங்க திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திவுமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சிதம்பரம் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வரும் திருமாவளவன், தனது கட்சியின் நிர்வாகி முருகானந்தம் என்பவரது வீட்டில் தங்கியிருக்கிறார். சிதம்பரம் தொகுதியில் உள்ள சி. தண்டீஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட நடேசன் நகர் பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் தங்கியிருந்தபடி திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், திருமாவளவன் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்ற நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் சோதனை நடைபெற்ற நிலையில், எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லபப்டுகிறது. திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய தகவல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் தொல் திருமாவளவனும் விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள். பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications