For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஷாலுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் பேட்டி

விஷாலுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    போங்க போங்க வரிசையில வந்து மனு தாக்கல் செய்யுங்க... விஷாலை விரட்டிய சுயேச்சைகள்!- வீடியோ

    நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் விஷாலுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

    குற்றாலத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டியில் ஸ்டாலின் குறித்தும் பேசினார். அதில் ''கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாட்டை ஆளுகின்ற அமைச்சர்கள் சென்று பார்க்காத நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய செய்யதியை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்த கட்சி திமுக தான்'' என்றார்.

    India Muslim League's Tamilnadu head talks about Vishal

    மேலும் " இப்போதுள்ள ஆட்சி நிவாரண பணிகளை செய்திட மிகவும் மெத்தன போக்கை கடை பிடிக்கிறது. முன் எச்சரிக்கை ஏதுவும் செய்யாததால் தான் தமிழ்நாட்டில் இதுபோன்ற வெள்ள அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பி திமுக ஆட்சியை விரைவில் கொண்டு வருவது மட்டுமே தமிழக மக்களின் ஒட்டு மொத்த மக்களின் விருப்பமாக உள்ளது'' என்றார்.

    அதேபோல் ''ஆர் கே நகர் இடை தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து சமய சார்பற்ற, மதநல்லிணக்க, சமூக நீதி கொள்கையில் நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து வெற்றி பெற செய்வோம். மேலும் தமிழ்நாட்டு அரசியலில் நல்ல அனுபவமும், திறமையும் உள்ளவர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். ஆனால் தற்போது சினிமா துறையில் உள்ளவர்கள் எல்லாம் புதிது புதிதாக தலைவர்களாக வர நினைப்பவர்கள் அரசியல் பின்னணி மற்றும் அனுபவம் இல்லாதவர்கள். இவர்களுக்கு ஓட்டு போட்டு ஏமாற தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல'' என்றும் கூறினார்.

    English summary
    India Muslim League's Tamilnadu head talks about Vishal and his election debut. He says that Vishal can't win in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X