சென்னையில் போலீசார் திடீர் சோதனை... குட்கா விற்பனை செய்த 421 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனை செய்த 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட போதை வஸ்துவான குட்கா விற்பனைக்கு எதிராக கடந்த 2 நாட்களாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையானது கொத்தவால்சாவடி, ஏழுகிணறு,சௌக்கார்பேட்டை, மணலி, பல்லாவரம், பழவந்தாங்கல், மேடவாக்கம், வேளச்சேரி, சேலையூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, வடபழனி, எம்ஜிஆர் நகர் மற்றும் பட்டாளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

Intensive raids at Chennai police seized 12,305 gutkha packets and 421 arrested

இந்தச் சோதனையின்போது 12,305 குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தடையை மீறி தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் குட்கா விநியோகம் செய்ய பயன்படுத்தும் சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு காவல்துறை இது குறித்து எச்சரிக்கை தந்துள்ளது. தடையை மிறி குட்கா பொருளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுல்லாமல் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் தாராளமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக திமுக குற்றஞ்சாட்டியது. திமுக களஆய்வு செய்ததில் இது அம்பலமானது என்றும் சட்டசபையில் புகைப்படங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காட்டியிருந்தார். இந்நிலையில் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

முன்னாள் காவல்துறைஆணையர்கள் ராஜேந்திரன், ஜார்ஜ் குட்கா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் குட்கா விற்பனை குறித்து சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது உண்மையிலேயே குட்கா விற்பனையை தடை செய்யவா அல்லது சிபிஐ விசாரணைக்கு போனால் சிக்கலாகி விடும் என்பதாலா என்பதை தொடர் சோதனைகளின் முடிவுகளே சொல்லும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai corporation police conducted sudden raids all over the city and seized 12 thousand 300 gutkha packets and arrested 421 for selling banned gutkha panmasala.
Please Wait while comments are loading...