எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், ரஜினிகாந்த்துக்கு ஈஷா 'சத்குரு' ஃபிட்னஸ் சவால்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஈஷா சத்குரு ஃபிட்னஸ் சவால்-வீடியோ

    கோவை: இன்று உலக யோகா தினமாகும். இதையொட்டி பிரதமர் மோடி முதல் மத்திய, மாநில அமைச்சர்கள் பலரும் யோகா செய்து அதை வீடியோ, போட்டோக்களாக ஷேர் செய்துள்ளனர்.

    இந்த நிலையில், ஈஷா யோகா மைய நிறுவனரும், யோகா பயிற்றுனருமான சத்குரு ஒரு டிவிட் வெளலியிட்டுள்ளார்.

    அதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஃபிட்னஸ் சேலஞ்சுக்கு தயாரா என சவால்விடுப்பதாக கூறியுள்ளார் சத்குரு. இவர்கள் இந்த சேலஞ்ச்சை ஏற்றால், தமிழக மக்களுக்கு ஆரோக்கியம், ஃபிட்னஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இதுபோல பிரதமர் மோடிக்கு ஒரு சேலஞ்ச் செய்து அதற்கு மோடியும், பதிலடியாக ஒரு வீடியோவை ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

    இதனிடையே ஈஷா நிறுவனரின் சவாலுக்கு நால்வரிடமும் இருந்து இதுவரை, பதில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+