நாங்க இருக்கோம்.. நம்பிக்கை அளித்த திமுக.. விஜய் வீட்டு ரெய்டால் அரசியலில் நடக்கும் போகும் அதிரடிகள்
சென்னை: நடிகர் விஜய் வீட்டு ரெய்டால் தமிழக அரசியலில் வரும் காலங்களில் நிறைய அதிரடிகள் நடக்கும் என்கிறார்கள். திமுகவையும் நடிகர் விஜயையும் இந்த ரெய்டு அதிக நெருக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்கள் முன்பு தமிழகம் முழுக்க 38 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.

கேள்விகள் பல
இந்த நிலையில் இந்த ரெய்டின் போது நடிகர் விஜய் குறி வைக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏஜிஎஸ் சரியாக வரி கட்டவில்லை என்றால் அவர்களை குறி வைக்கலாம். பைனான்சியர் அன்புச்செழியன் சரியாக வரி கட்டவில்லை என்றால் அவர்களை குறி வைக்கலாம். ஆனால் ஏன் விஜய் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இதற்கு பின் வருமான வரி மட்டும்தான் காரணமா, அல்லது அரசியல் காரணங்கள் எதுவும் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

காரணம்
இதற்கு பின் உண்மையில் நிறைய அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்தை பாஜக பெரிய அளவில் நம்பி இருக்கிறது. 2021ல் ரஜினியை முன்னிறுத்தி அரசியல் செய்ய பாஜக முயன்று வருகிறது. தமிழகத்தில் கால் பதிக்க பாஜக தங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக ரஜினியை பார்க்கிறது. ஆனால் இதற்கு எதிர்காலத்தில் ஒரு வகையில் விஜய் இடைஞ்சலாக வர வாய்ப்புள்ளது.

விஜய் கொள்கை
அரசியல் ரீதியாக விஜய் பாஜகவிற்கு கொள்கைக்கு எதிரானவர் என்று பலமுறை நிரூபித்து இருக்கிறார். அதேபோல் விஜய் திமுகவிற்கு ஒரு வகையில் நெருக்கம் ஆனவர். இதனால் ரஜினி அரசியலுக்கு வந்தால், திமுக விஜயை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும். விஜய் முன்னிறுத்த திமுக நினைக்கும். ரசிகர்கள் அடிப்படையில் ரஜினி - விஜய் இருவருக்கும் பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறது. ரஜினியை விட, விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது. அதேபோல் மக்களுக்கு நெருக்கமான கொள்கைகளை விஜய் பேசி வருகிறார்.

பாஜக பார்க்கிறது
இதனால் விஜயை ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஒரு இடைஞ்சலாக பாஜக பார்க்கிறது என்று விஜயின் ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால்தான் விஜய் பழிவாங்கப்படுகிறார் என்று அவரின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பின் தமிழக காங்கிரஸ், விஜய்க்கு நேரடியாக ஆதரவு அளித்தது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். திமுக தலைவர்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.

போகும் எல்லாம்
விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியலே மாறும். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பின் நடந்த மாற்றங்கள் போல பல மாற்றங்கள் நடக்கலாம். அதை எல்லாம் தடுக்கவே இந்த ரெய்டு. விஜயை மிரட்டும் வகையில் இப்படி செய்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால்தான் எதிர்க்கட்சிகள் இப்போதே விஜயை ஆதரிக்க தொடங்கிவிட்டது. முன்னணி நடிகர்கள் பலர் இதேபோல் விஜயை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.

திமுக திட்டம்
அதேபோல் திமுகவின் உதயநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விஜயிடம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் பிரச்சனை வந்தால் நாங்கள் உடன் இருப்போம் என்று திமுக நம்பிக்கை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2021 சட்டசபை தேர்தலில் ரஜினி களமிறங்கினால், விஜய், சூர்யா, சத்யராஜ் என்று பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நடிகர்களை திமுக கண்டிப்பாக களமிறக்கும் என்று கூறுகிறார்கள்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications