14 கார்களில் ஆவணங்களை நைசாக கடத்திய தினகரன் ஆதரவாளர்கள்: சம்மன் அனுப்பிய ஐடி அதிகாரிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறைக்கு தெரியாமல் பல கோடி ருபாய் மதிப்பிலான ஆவணங்களை முறைகேடாக சசிகலா உறவினர்கள் எடுத்துச் சென்று இருக்கின்றனர். தற்போது அவர்கள் அனைவருக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

சசிகலாவிற்கு நெருக்கமாக இருக்கும் பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 190க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

IT department summons Sasikala relatives

இந்த சோதனையில் 1800 க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின் முடிவில் அதிகாரிகள் நிறைய ஆவணங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.

நான்காவது நாளான இன்று இன்னும் பல இடங்களில் சோதனை நீடிக்கிறது. இந்த சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக பல கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் நேற்று முறைகேடாக கை மாற்றப்பட்டு இருக்கிறது.

மொத்தம் 14 கார்களில் தினகரனின் ஆதரவாளர்கள் இந்த சொத்து விவரங்களை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்துச் சென்று இருக்கின்றனர். இதில் முறைகோடான சொத்து குறித்து விவரங்கள் நிறைய அடங்கி இருக்கிறது.

இதை தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதையடுத்து சசிகலா குடும்பத்தில் பலருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. இதற்கு விரைவில் பதில் அளிக்கும்படி சம்மனில் கூறியிருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT department has raided Sasikala's relatives house and their offices. Sasikala's relatives took many documents away without the knowledge of the officials.
Please Wait while comments are loading...