கல்குவாரி முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பியிடம் வருமானவரித்துறையினர் கிடுக்கிப்பிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது சகோதரர் உதயகுமார் மற்றும் அவரது உதவியாளரிடம் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

IT grill minister Vijayabhaskar and his brother

மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. இதனையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்ன தம்பி, அண்ணன் சி.உதயகுமார் ஆகிய இருவரும் திருச்சியில் உள்ள வருமான வரித் துறை மண்டல அலுவலகத்தில் ஆஜராகி

மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்ன தம்பி, அண்ணன் சி.உதயகுமார் ஆகிய இருவரும் திருச்சியில் உள்ள வருமான வரித் துறை மண்டல அலுவலகத்தில் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இன்று நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தம்பியிடம் வருமானவரித்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை வருமானவரி அலுவலகத்துக்கு வரவழைத்து உதயகுமார் விசாரிக்கப்பட்டு வருகிறார். சி.விஜயபாஸ்கர் தம்பி உதயகுமாரின் உதவியாளரையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் வைத்துள்ள கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income Tax officials investigation on friday documents recovered from a quarry at Thiruvengaivasal and an educational institution.
Please Wait while comments are loading...