இதோ சொல்லிட்டாங்கல்ல ஐடி அதிகாரிங்க... விஜய் வரி ஏய்ப்பு எதுவும் செய்யலையாம்!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2 ஆண்டிற்கு முன்னர் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது வரி ஏய்ப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் முழுவதும் வரி செலுத்தி உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மெர்சல் படத்தில் விமா்சனத்திற்குள்ளான திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட்டிய பாஜக தேசிய செயலர் எச். ராஜா அதில் மொ்சல் படத்தில் ஜி.எஸ்.டி. தொடா்பான வசனங்கள் விஜயின் பொருளாதார அறிவீனத்தை காட்டுவதாகவும், பதிவிட்டிருந்தார்.
மேலும் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா? என்று ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையை சுட்டிக்காட்டியும் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

வருமான வரி சோதனை
கடந்த 2015ம் ஆண்டு புலி படம் வெளியான சமயத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது விஜய் முழுவதும் வருமான வரி செலுத்தி உள்ளாரா அல்லது ஏதேனும் வரி ஏய்ப்பு செய்துள்ளாரா என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர்.

அப்போதே விளக்கம் தந்த விஜய்
அந்த சமயத்தில் விஜய் சரியாக வரி செலுத்தவில்லை என்று செய்திகளும் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்போதே நடிகர் விஜய் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தான் சட்டத்தை மதிப்பதாகவும் எப்போதும் வரி ஏய்ப்பு செய்ததில்லை என்றும் கூறி இருந்தார்.
|
சட்டத்தை மீறவில்லை
அதிகாரிகளுக்கு தான் எப்போதுமே முழு ஒத்துழைப்பு அளிப்பதாக விஜய் குறிப்பிட்டிருந்தார். மேலும் தவறான தகவல்கள் மூலம் தன்னை புண்படுத்த வேண்டாம் என்றும் விஜய் கேட்டுக் கொண்டிருந்தார்.

முழுவதும் வரி கட்டுகிறார்
இந்நிலையில் விஜய் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து அதிகாரிகள் உறுதியான தகவலைத் தெரிவித்துள்ளனர். வருமான வரி சோதனை நடந்த போது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவர் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை என்பது உறுதியானது, அவர் முழுவதும் வரி கட்டி இருக்கிறார் அதனால் அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை என்று ஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல்












Click it and Unblock the Notifications