முதல்வர் ஈபிஎஸ் நண்பர் தியாகராஜன் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

மணல் காண்ராக்டர்கள் சேகர் ரெட்டி, நாமக்கல் சுப்பிரமணியன் ஆகியோரைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் தியாகராஜனும் வருமான வரித்துறையின் வலையில் சிக்கியுள்ளார்.

IT raids at highways contractor Tiyagarajan company in Chennai

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரராக தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். அவருடைய வீடு மற்றும் குருமூர்த்தி என்ஜியரிங் எண்டர்பிரைசஸ், ஜிஜி இன்ஃபிராஸ்டர்க்சர்ஸ், தியாகராஜன் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அஷோக் நகர் பகுதியில் இந்த நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த 3 நிறுவனங்களும் தமிழக அரசின் பெரும்பாலான சாலை போடும் பணிகளையும், பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளன.

இந்நிறுவனங்கள் ரூ.20 கோடி மதிப்புள்ள உடைமைகளை ரூ.10 கோடி என்று பதிவு செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் தியாகராஜன் மிக முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். நெடுஞ்சாலைத் துறை கடந்த 6 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

IT dept raids colleges in Chennai

நேற்று இரவு முதல் பலமணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, முழுத் தகவல்கள் தெரியவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The income tax department has launched search and survey operations in three companies owned by a highway contractor in Chennai.
Please Wait while comments are loading...