ஒரு வழியாக என்ட் கார்டு போட்ட அதிகாரிகள்...ஜெயா டிவியில் ரெய்டு முடிந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா?.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ

  சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 5வது நாளாக ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை முடிந்து அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

  கடந்த வியாழனன்று அதிகாலை 5.30 மணியளவில் திமுதிமுவென வருமான வரி அதிகாரிகள் காவல்துறையினர் சகிதமாக ஈக்காட்டுத்தாங்கல், நமது எம்ஜிஆர் அலுவலகத்திற்குள் வந்தனர். அப்போது முதல் தொடர்ந்து ஜெயா டிவி அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் முதலீடுகள், வருமானம் என்ன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தொடர்ந்து ஜெயா டிவியின் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.

  IT raids continue at 5 places at Chennai

  இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் சோதனையை முடித்துக் கொண்டு 5 வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலர்கள் 2 வாகனங்களில் ஜெயா டிவி அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அதிகாரிகள் எஎடுத்துச் சென்ற ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக நிர்வாகிகள் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிகிறது.

  ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்தில் சோதனை முடிந்திருந்தாலும் ஜெயா டிவியின் தற்போதைய சிஈஓ விவேக் ஜெயராமனின் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டிலும் 5 நாட்களாக அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் ஒரு அதிகாரி மட்டுமே விவேக் வீட்டில் இருந்து ஆவணங்களை சரிபார்க்கும் நிலையில் காலையில் 2 அதிகாரிகள் வந்த பின்னர் மீண்டும் விசாரணை தொடர்கிறது.

  சொத்து தொடர்பான ஆவணங்களில் இருக்கும் சந்தேகங்களை அதிகாரிகள் விவேக் ஜெயராமனிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விவேக்கின் சகோதரிகளான கிருஷ்ணப்ரியா, ஷகீலா மற்றும் போயஸ் இல்லத்தில் கட்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் பார்த்து வந்த உதவியார் பூங்குன்றன் உள்ளிட்டோர் வீடுகளிலும் வருமான வரித்துறையின் சோதனை தொடர்கிறது.

  5 நாட்களுக்கு முன்னர் 187 இடங்களில் தொடங்கிய சோதனை கடைசியாக இளவரசியின் குடும்பத்தை சுற்றி நிற்கிறது. இதனிடையே சசிகலா, தினகரனுக்கு ஜோதிடம் பார்த்த கடலூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஜோசியரை விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நேற்று மாலையே விவேக் ஜெயராமனின் வீட்டில் வருமான வரி சோதனை முடிவுற்றதாக செய்திகள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் சிக்கிய ஆவணங்களை சரிபார்ப்பதற்காக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Incometax raids continue at Jaya television and Vivek, Krishnapriya residence for the fifth day, officials still verifying the asset documents they were having.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற