For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை, புதுச்சேரியில் பாலாஜி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் ஐடி ரெய்டு: 85 கோடி சிக்கியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ பாலாஜி அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு சோதனை நடத்தியது. மகாத்மா காந்தி கல்லூரி அலுவலர் ஜெரால்டின் 2 வீடுகளிலும் பல மணி நேரம் சோதனை நடைபெற்றது.

புதுச்சேரியில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. ஜெரால்டு வீடுகளில் இருந்து மட்டும் ரூ.42 கோடி பணம் சிக்கியதாகவும், இயந்திரங்களைக் கொண்டு பல மணி நேரமாக பணத்தை எண்ணும் பணி நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.

வரி ஏய்ப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருப்போருரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீபாலாஜி கல்வி அறக்கட்டளை

ஸ்ரீபாலாஜி கல்வி அறக்கட்டளை

ஸ்ரீபாலாஜி கல்வி அறக்கட்டளைக்கு உரியது புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி. காரைக்கால் பாரதியார், புதுவை ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரிகள் அறக்கட்டளைக்கு சொந்தமானது ஆகும். புதுச்சேரி, காரைக்காலில் பல் மற்றும் நர்சிங் கல்லூரிகளையும் அறக்கட்டளை நடத்துகிறது. பாலாஜி அறக்கட்டளையை நிர்வகிப்பவர் சென்னையில் வசிக்கும் ராஜகோபால்.

வருமான வரி சோதனை

வருமான வரி சோதனை

மகாத்மா காந்தி கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெரால்டு ஆவார் மருத்துவ சீட்டுகளை விற்கும் பொறுப்பை ஜெரால்டிடம் ஒப்படைத்து இருந்தார் ராஜகோபால். ஜெரால்டு வீடு. மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி உள்பட அந்த கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் விசாரணை

அதிகாரிகள் விசாரணை

பாலாஜி அறக்கட்டளை நிர்வாகி ராஜகோபால் மகன் பிரசாந்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டெல்லியில் இருக்கும் ராஜகோபாலுக்கு விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

மூட்டை மூட்டையாக பணம்

மூட்டை மூட்டையாக பணம்

புதுச்சேரியில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் ரூ.42 கோடி பறிமுதல்​ செய்யப்பட்டுள்ளது. சென்னை சத்யசாய் கல்லூரியில் ரூ.30 கோடியும் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.பி.எஸ் சீட்டு விற்பனை

எம்.பி.பி.எஸ் சீட்டு விற்பனை

கல்லூரி அலுவலர் ஜெரால் வீட்டில் இருந்து பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. எம்பிபிஎஸ் மற்றும்எம்டி படிப்புகளுக்கான சீட்டுகளை விற்றது அம்பலம் ஆகியுள்ளது.

வேந்தர் மூவிஸ் மதனுடன் தொடர்பு?

வேந்தர் மூவிஸ் மதனுடன் தொடர்பு?

எஸ்.ஆர்எம் குழுமத்துடன் தொடர்புடைய மதனுக்கு மகாத்மா காந்தி கல்லூரியில் அறிமுகம் உள்ளது. நடப்பாண்டில் மகாத்மா காந்தி கல்லூரி பெயரிலும் வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளார். மதன் மாயமானதால் மாணவர்களிடம் பணத்தை திருப்பித் தர கல்லூரி உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் பலமுறை முயன்றும் கல்லூரி நிர்வாகி ராஜகோபால் சந்திக்கவில்லை.

பணம் பிடிபட்ட விவகாரம்

பணம் பிடிபட்ட விவகாரம்

பணத்தை பறிகொடுத்தவர்கள் தந்த தகவல் பேரில் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. 50 அதிகாரிகள் காலை 10 மணிக்கு சோதனையைத் தொடங்கினர். ஜெரால்டு வீட்டில் மூட்டைகளில் கட்டிக்கிடந்த பணத்தைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இயந்திரங்களைக் கொண்டு பல மணி நேரமாக பணத்தை அதிகாரிகள் எண்ணினார்கள்.

கோடிக்கணக்கில் பணம்

கோடிக்கணக்கில் பணம்

இந்த சோதனையில் தங்க நகை, நிலம சம்மந்தப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 350க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்ட இந்த சோதனையில், இதுவரை வருமான வரித்துறையின் வரலாற்றில், இந்த வழக்கில் தான் அதிக அளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

English summary
More than Rs 85 crore were seized in massive searches conducted by the Income Tax Department on 30 premises in Chennai and Puducherry on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X