வரி கட்டாவிட்டால் சோதனை நடத்துவது இயல்புதான்.. எடப்பாடி அணியின் எம்பி வைத்திலிங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: முறையாக வரி கட்டாதவர்கள் வீட்டில் சோதனை நடத்துவது இயல்புதான் என எம்பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தினர், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 190க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Its normal IT raid who not paying tax properly: MP Vaithilingam

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியை சேர்ந்த எம்பி வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது யார் முறையாக வரி செலுத்தவில்லையோ அவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவது இயல்புதான் என அவர் கூறினார்.

ஏற்கனவே இதுபோல் பலமுறை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் விவகாரத்துக்கம் வருமான வரித்துறை சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் எம்பி வைத்திலிங்கம் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Edappadi Palanisami team MP Vaithilingam said its normal IT raid who not paying tax properly. There is no conectivity between double leaf symbol and IT raid he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற