For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி ஜல்லிக்கட்டுக்கு தடை: மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாத காரணத்தால் மணப்பாறை அருகே உள்ளே ஆவாரங்காட்டில் ஜனவரி 16ம்தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் தற்காலிக தடைவிதித்துள்ளார்.

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு பணிகள் குறித்து கடந்த திங்கள் கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பார்வையாளர்களுக்கான கேலரி அமைப்பதில் சில மாற்றங்களை செய்யுமாறு விழா குழுவினருடன் கூறியிருந்தார்.

Jallikattu

ஆனால் இதுவரை கேலரி மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததால் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த ஜல்லிகட்டில் திருச்சி கரூர் புதுக்கோட்டை பெரும்பலூர். சிவங்கங்கை. மதுரை, திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க இருந்தன.

களைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு தயாராக இருந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

English summary
While the Jallikattu competition is held in Palamedu, Madurai in a grand manner, the Jallikattu competition scheduled for tomorrow in Manapparai, Trichy is bann
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X