ஜூலியானா எங்கம்மா.. பிக் பாஸில் பாரம்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் ஜூலிதான்.

வெறும் ஜூலி என்றால் யாருக்கும் தெரியாது. கூடவே, சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸைக் காணோம்மா என்று பாட்டோடு சொல்லிப் பாருங்கள். டக்கென புரிய வரும். ஆம், அதே ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்ட முழக்கப் புகழ் ஜூலிதான்.

தனது அதிரடி முழக்கப் போராட்டத்தால் படு வேகமாகப் புகழ் பெற்றவர் ஜூலி. அவரது பெயரே இப்போதுதான் வெளியுலகுக்கு முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் பெண்

ஜல்லிக்கட்டுப் பெண்

ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு முன்பு கூட அவர் அளித்த பேட்டியில் தனது பெயர், ஊர் விவரத்தை வெளியிடவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊரைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேட்டி அளித்திருந்தார் ஜூலி.

தில் ஜூலி

தில் ஜூலி

தன்னம்பிக்கையும், தைரியமும், போராட்டக் குணமும் மிக்க பெண் என்பதை அப்போது நமக்கு உணர்த்தியவர் ஜூலி. இதோ இப்போது பிக் பாஸ் களத்திற்குள் நுழைந்துள்ளார். ஜல்லிக்கட்டுப் பெண்ணாக நமக்குத் தெரிந்த ஜூலி தற்போது பிக் பாஸ் ஜூலியாகியுள்ளார்.

கமலே ஜெர்க் ஆனார்

கமலே ஜெர்க் ஆனார்

போராட்டக்குணம் படைத்த பெண் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தலையில் சிவப்புத் துணியைக் கட்டியபடி மேடையேறி நடனமும் ஆடி அசத்தினார் ஜூலி. அவரது தைரியம் கமல்ஹாசனையே கூட சற்று ஜெர்க் ஆக வைத்திருக்கும். பார்க்கலாம், நடிப்புக் கூட்டத்திற்கு மத்தியில் புரட்சிப் புயல் ஜூலி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

பத்திரமா அனுப்பி வைங்கப்பா

பத்திரமா அனுப்பி வைங்கப்பா

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கலாம்.. ஜூலியின் போர்க்குணத்தை குறைத்து விடாமல், முடிந்தால் கூடுதலாக்கி, கூடவே வெற்றியையும் கொடுத்து அனுப்பி வைத்தால் போதுமானது. இவர் போன்ற பெண்கள்தான் தமிழகததிற்கு தற்போது அதிகம் தேவை.

புரட்சி ஜூலி நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் இணைப்பு:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jallikattu fame girl Julie is participating in Big Boss reality show, hosted by actor Kamal Haasan.
Please Wait while comments are loading...