For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“வணக்கம் உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன்”... வாட்ஸ் அப்பில் வாக்கு சேகரிக்கும் ஜெ.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி, மீண்டும் அக்கட்சிக்கே வாக்களிக்கும் படி முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வருகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Jaya's campaign viral now in social media

இந்நிலையில், வாக்காளர்களைக் கவர பல்வேறு பிரச்சார யுக்திகளையும் கட்சிகள் கையாண்டு வருகின்றன. அதன்படி, தொலைக்காட்சிகளில் விளம்பரம், வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூகவலைதளப் பக்கங்களில் விளம்பரம் என தகவல் தொழில்நுட்பத்தையும் தங்களது பிரச்சாரத்திற்கான களமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கும் 32 விநாடி வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் மின்சார உற்பத்தியில் திமுக அரசோடு ஒப்பிட்டு, அதிமுக அரசு செய்த சாதனைகளை எடுத்துக் கூறி, இரு கரங்களையும் கூப்பி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கிறார் ஜெயலலிதா.

மேலும், அதில் ஜெயலலிதா பேசுவதாவது:-

வணக்கம் உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன். நினைவிருக்கிறதா உங்களுக்கு 15 மணி நேரம் மின்வெட்டு. பள்ளி பிள்ளைகள் படிக்கவும் முடியவில்லை. தொழில்கள் எல்லாம் முடங்கின. துன்பங்கள்தான் பெருகின. அது அந்த காலம்.

இப்பொழுது தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆகியுள்ளது. எங்கும், எப்பொழுதும் எல்லோருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. இந்த மகத்தான சாதனை தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கே. நன்றி வணக்கம்" என இவ்வாறு அந்த வீடியோ முடிகிறது.

ஏற்கனவே, கடந்தாண்டு கடும் வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தபோது, இதேபோன்று ஜெயலலிதா பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அதில், "உங்கள் அன்புச் சகோதரி பேசுகிறேன்.." எனப் பேசியிருந்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தகக்து.

English summary
The ADMK general secretary and Chief minister Jayalalitha's election campaign video is now viral in Whats app.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X