For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார்: ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம்

வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: ஆறுமுகசாமி கமிஷனில் 2-ஆவது முறையாக ஆஜரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதா வீட்டில் மயங்கினார் என்று வாக்குமூலம் அளித்தார்.

    ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே ஆண்டில் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

    இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருக்கமானவர்கள் என 20-க்கும் மேற்பட்டோரை அழைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

    வீட்டில் மயக்கம்

    வீட்டில் மயக்கம்

    அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமார் இன்று 2-ஆவது முறையாக கமிஷன் முன்பு ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார்.

    அப்பல்லோ

    அப்பல்லோ

    அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னர் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவிட்டுதான் அப்பல்லோவுக்கு கொண்டு சென்றோம். அப்போது நான் அவருடன் இருந்தேன்.

    ஸ்டீராய்டு

    ஸ்டீராய்டு

    மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு இருநாள்கள் முன்னரே ஜெயலலிதாவுக்கு லேசான காய்ச்சல் இருந்தது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன்னர் சருமபிரச்சினைக்காக ஜெ. இரு வாரங்களுக்கு ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டார்.

    கேள்விகள் எழுப்பப்பட்டன

    கேள்விகள் எழுப்பப்பட்டன

    ஸ்டீராய்டு மருந்து எடுத்து கொண்டதால் அவரது உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்றார் சிவக்குமார். அவரிடம் 2016 செப் 22-ம் ஆம் தேதிக்கு முன்னர் ஜெ.வுக்கு அளித்த சிகிச்சை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.

    English summary
    Dr Sivakumar appears before Arumugasamy Commission and says that Jayalalitha faints in Poes Garden House after we give first aid and then she was taken to Apollo Hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X