ஜெ. மீதான வருமான வரி வழக்கில் துறை வாரியாக பிரச்சனையை தீர்க்க அனுமதிக்க கூடாது: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வருமானவரி வழக்கில், துறை வாரியாக பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள ஜெயலலிதா புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசும், பிரதமரும், குறிப்பாக வருமான வரித் துறையும் எச்சரிக்கையோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, துறைவாரியாக பிரச்னையை தீர்த்துக்கொள்ள அரசு முன்வந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும்.
இது தவறு செய்வோரை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு இப்பிரச்னையை மத்திய அரசு அணுக வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications