For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா vs கருணாநிதி.. மறக்க முடியாத அரசியல் மோதல்கள்!

ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்குமான அரசியல் மோதல்கள் உலக பிரசித்தி பெற்றவை. அரசியலில் கடைசிவரை இவர்கள் பகையாளிகளாவே இருந்தனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: எட்டு எட்டாக மனித வாழ்வை பிரிச்சிக்கோ என்பார்கள். அதேபோல ஜெயலலிதாவின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் 8 முக்கிய சம்பவங்கள் அவரது வாழ்க்கையையே முற்றிலுமாக புரட்டிப் போட்டன.

அதில் குறிப்பிடத்தக்கவை, அவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது. எம்ஜிஆருடனான சந்திப்பு, கருணாநிதியுடனான முதல் சட்டசபை மோதல் போன்றவை.

Jayalalithaa and Karunanidhi clashes

எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி அம்மையாருடன் ஏற்பட்ட மோதலில், அதிமுகவின் இரட்டைஇலைச் சின்னத்தைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. 1988ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக, வீற்றிருக்க, தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவியாக ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தினார்.

1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் ஜெயலலிதா. 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, தமிழகச் சட்டமன்றத்தில் நடந்த அமளியில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதாகவும், உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

தலைவிரி கோலமாக, கிழிந்த சேலையுடன் ஜெயலலிதா சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த அந்தச் சம்பவத்தின் காட்சிகள் தமிழக மக்களிடையே குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.

அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்குத் தமிழக முதல்வராகும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த காரணங்களில் இந்தச் சம்பவமும் முக்கிய இடம் வகித்தது.

சொத்துக் குவிப்பு புகார் எழுந்ததால், 1996ஆம் ஆண்டு தேர்தலில் மோசமான தோல்வியடைந்தார் ஜெயலலிதா. 1996ல் டிசம்பர் 7ம் தேதி ஊழல் வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதும், தொடர்ந்து சில வாரங்கள் அவர் சிறைவாசத்தை அனுபவித்ததும் மக்களிடம் அனுதாபத்தை ஈட்டித் தந்தன.

ஆனால் சிறையில் அடைத்ததன் காரணமாகவே, கருணாநிதி மீது அவரும் அவரது கட்சியினரும் கடைசிவரை கோபத்தை மறக்காமல் காண்பித்து கொண்டிருந்தனர். அதேநேரம், ஜெயலலிதாவின் அந்தக் கைது சம்பவம்தான் அவருக்குள் மிகப் பெரிய மனமாற்றங்களை ஏற்படுத்தி, மீண்டும் அரசியலில் விட்ட இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற வைராக்கியத்தை அவருக்கு ஏற்படுத்தியது.

மீண்டும் விஸ்வரூபம் எடுத்து ஜெயலலிதா 2001ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது, அடுத்தகட்டமாக செய்த வேலை, 2001-ம் வருடம் ஜூன் 30-ம் தேதியன்று அதிகாலையில் கருணாநிதியை கைது செய்ததுதான். மேம்பால ஊழல் வழக்கிற்காக கருணாநிதியை போலீசாரை அனுப்பி நள்ளிரவில் கைது செய்ததும், அது தொலைக்காட்சி சேனல்களில் மாறி மாறி காண்பிக்கப்பட்டதும் உலக பிரசித்தி.

தமிழகத்தில், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சி அமைந்ததும், நடந்த முதல் சட்டசபை கூட்டத் தொடரே, சட்டசபை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. 2006 மே 26ம் தேதி, சட்டசபையில் அ.தி.மு.க.,வினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் மாறி மாறி வசைமாரி பொழிந்தனர். இந்த சமயத்தில் அ.தி.மு.க.,வினர், முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்களை அடிக்கப் பாய்ந்தனர். குறிப்பாக, தற்போது, தி.மு.க.,வில் சேர்ந்துள்ள சேகர்பாபு, அப்போது முதல்வர் கருணாநிதியை தாக்க பாய்ந்தார். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரச்னை ஏற்பட்ட சமயத்தில், ஜெயலலிதா சபையில் இல்லை. இதனால், அவரை சஸ்பெண்ட் செய்யவில்லை.

இதன்பின், ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறித்து, தானே எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. அதோடு மட்டுமின்றி, சட்டசபைக்கு தனி ஆளாக வந்து, ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால், ஜெயலலிதாவின் துணிச்சல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அரசியலில் கடைசி மூச்சுவரை ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியுடன் மோதல் போக்கையே தொடர்ந்து வந்தார்.

English summary
Jayalalitha and Karunanidhi clashes in the Tamilnadu political life in known fact.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X