For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 3-ந் தேதி முதல் ஜெ. முதல்கட்ட பிரசாரம்

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் முதல்கட்டமாக 16 நாட்கள் முதல்வர் ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் செய்கிறார். மார்ச் 3-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

Jayalalithaa to launch Lok Sabha poll campaign on March 3 from Kanchi

அதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக தமிழகத்தில் சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்ட அறிக்கையை அவர் வெளியிட்டார். முதல்கட்டமாக மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை 16 நாட்கள் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 19 இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் பிரசாரம் தொடக்கம்

காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் ஜெயலலிதா மார்ச் மாதம் 3-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் மார்ச் மாதம் 4-ந் தேதி ஜெயலலிதா பேசுகிறார்.

நாகப்பட்டினம் (தனி) மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளில் 6-ந் தேதி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். நாகப்பட்டினம் அவரித் திடலிலும், மயிலாடுதுறை செம்பனார்கோவில் ஒன்றியம் காலஹஸ்திகாபுரம் ஊராட்சியிலும் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார்.

கன்னியாகுமரி தொகுதியில், நாகர்கோவில் நாகராஜா திடலில் 9-ந் தேதி ஜெயலலிதா பேசுகிறார். சிதம்பரம் (தனி) தொகுதியில், சிதம்பரம் கீழ வீதியில் 11-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிகளில் 13-ந் தேதி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு தொகுதியில், சித்தோடு பேரூராட்சி சித்தோடு நால்ரோட்டிலும், திருப்பூர் தொகுதியில், அண்ணாநகர் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையிலும் ஜெயலலிதா பேசுகிறார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில், சின்னசேலம் ஒன்றியம், உலகங்காத்தான் ஊராட்சி, ஆற்காடு மில் பகுதியில் 15-ந் தேதியும் ராமநாதபுரம் தொகுதியில், ராமநாதபுரம் நகரம் அரண்மனை முன்பு 18-ந் தேதியும் (செவ்வாய்கிழமை) ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார்.

திருச்சி.. புதுச்சேரியில்....

இதேபோல், திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே, 19-ந் தேதி ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். விருதுநகர் மற்றும் சிவகங்கை தொகுதிகளில் 21-ந் தேதி ஜெயலலிதா வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

விருதுநகர் தொகுதியில், சிவகாசி நகரம், சிவகாசி - விருதுநகர் நெடுஞ்சாலை அருகில், குறுக்குப்பாதையிலும், சிவகங்கை தொகுதியில், காரைக்குடி, மகர நோன்பு கொட்டல், காந்தி ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

புதுச்சேரி தொகுதியில், உப்பளம் கடலூர் சாலையில் ஏ.எப்.டி. மைதானத்தில் 23-ந் தேதியும் திண்டுக்கல் தொகுதியில், திண்டுக்கல் பழனி ரோடு, அங்குவிலாஸ் விளையாட்டு திடலில் 25-ந் தேதியும் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார்.

வேலூர் தொகுதியில், அணைக்கட்டு ஒன்றியம், இடையன்காடு ஊராட்சி, காட்டுக்கொல்லையில் 28-ந் தேதியும் தூத்துக்குடி தொகுதியில், தூத்துக்குடி அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஏப்ரல் 1-ந் தேதியும் ஜெயலலிதா பேசுகிறார்.

தேனி தொகுதியில், தேனி நகரம் தேனி பைபாஸ் ரோட்டில் 2-ந் தேதியும் தென்காசி (தனி) தொகுதியில், சங்கரன்கோவில் வடக்கு மாசி வீதியில் 5-ந் தேதியும் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கிறார்.

English summary
AIADMK on Monday announced that party general secretary and Chief Minister Jayalalithaa would begin the election campaign for Lok Sabha polls on March 3 from Kanchipuram, about 70 km from here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X