For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கு என்ன சிகிச்சை அளிக்கிறது எய்ம்ஸ் டாக்டர்கள் குழு.. பின்னணி தகவல்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்னானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவசர சிகிச்சை நிபுணரும், நுரையீரல் தொற்று நோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரிச்சர்ட் பேல் லண்டனில் இருந்து வந்து சிகிச்சையளித்து விட்டு லண்டன் திரும்பிவிட்ட நிலையில், இப்போது எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதுவரை 5 அறிக்கைகள் வெளியான நிலையில் தற்போது புதிய மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவர்கள்

எய்ம்ஸ் மருத்துவர்கள்

இந்த நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்னானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

மருத்துவ குழுவினருடன் ஆலோசனை

மருத்துவ குழுவினருடன் ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்தனர். இதுவரை முதல்வருக்கு அளித்து வந்த சிகிச்சை முறைகளையும், மருத்துவ அறிக்கைகளையும் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி டாக்டர்களிடம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதன் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று மருத்துவர்கள்

மூன்று மருத்துவர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் நேற்று முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை தொடங்கி உள்ளனர். இந்தக் குழுவில் ஜி.சி.கில்னானி - எய்ம்ஸ் மருத்துவமனையின் மெடிசின் துறையின் பேராசிரியர், அஞ்சான் டிரிக்கா - அனஸ்தீசியா நிபுணர், நிதீஷ் நாயக் - இதயநோய் மருத்துவர் இவர்கள் மூவரும்தான் அடுத்த சில நாட்களுக்கு ஜெயலலிதாவுக்குத் தேவையான தீவிர சிகிச்சைகளை அளிப்பார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நுரையீரல் நோய் நிபுணர்

நுரையீரல் நோய் நிபுணர்

டாக்டர் ஜி.சி.கில்னானி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவத்துறையின் பேராசிரியாக இருப்பவர். நுரையீரல் நோய் நிபுணர். காய்ச்சல்களுக்கு, நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லவர். பரூக் அப்துல்லா 2012ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் சேர்க்கப்பட்டபோது, இவர் தலைமையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது

மயக்கவியல் நிபுணர்

மயக்கவியல் நிபுணர்

டாக்டர் அஞ்சான் டிரிக்கா - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அனஸ்தீசியா துறையின் பேராசிரியர். மயக்க மருந்து அளிப்பதில் நிபுணர். பல ஆய்வுக்கட்டுரைகளை அனஸ்தீசியா துறை குறித்தும், மயக்க மருந்துகளைச் சரியாக சிகிச்சைக்குப் பயன்படுத்துவது குறித்தும் எழுதியிருக்கிறார்.

மன்மோகன்சிங் சிறப்பு மருத்துவர்

மன்மோகன்சிங் சிறப்பு மருத்துவர்

டாக்டர் நிதீஷ் நாயக் - எய்ம்ஸ் மருத்துவமனையின் முக்கிய இதய நோய் நிபுணர். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு மருத்துவராக இருந்திருக்கிறார். இது தவிர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் சிகிச்சை அளித்துள்ளார். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை இந்தியாவில் இயக்கி வந்த அப்துல் கரீம் எனப்படும் துண்டாவுக்கும் இவர் சிகிச்சை அளித்துள்ளார். இவர் சிக்கலான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

15வது நாளாக சிகிச்சை

15வது நாளாக சிகிச்சை

முதல்வர் ஜெயலலிதா இன்று 15வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் பூரண நலம் அடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள், மகளிரணியினர் இன்றும் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழக மக்களின் பிராத்தனையாகும்.

முதல்வர் ஜெயலலிதா இன்று 15வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் பூரண நலம் அடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள், மகளிரணியினர் இன்றும் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழக மக்களின் பிராத்தனையாகும்.

English summary
A team of experts from the All India Institute of Medical Sciences (AIIMS), Delhi, arrived in Chennai on Wednesday to provide consultations on further treatment for Chief Minister Jayalalithaa, who has been admitted to the Apollo Hospitals in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X