For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதமோதல் தடுப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalithaa urges PM not to move Bill in Parliament session
சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மதமோதல் தடுப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

மதமோதல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம் எழுதியிருந்தது. திருத்தப்பட்ட மசோதாவின் நகலையும் அனுப்பி வைத்திருந்தது. ஏற்கனவே 2011ல் உருவாக்கப்பட்ட மசோதாவில் திருத்தங்கள் செய்து இந்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

இது வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2011ல் இந்த மசோதா தயாரிக்கப்பட்டபோது, அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எனது விரிவான ஆட்சேபனைகளையும் கூறியிருந்தேன்.

நான் பரிந்துரை செய்த அம்சங்களில் ஒரு சில பரிந்துரைகள் மட்டுமே இப்போது ஏற்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய வடிவில் மதமோதல் தடுப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றக்கூடாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa on Monday urged Prime Minister Manmohan Singh not to move the “Prevention of Communal (Access to Justice and Reparations) Bill, 2013 in the coming Parliament session as it continues to suffer from “lacunae” and encroached upon the powers of States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X