ஆர்.கே.நகரில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முந்துகிறார் ஜெயலலிதா - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது.
கடந்த 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பின்னர் தனது பதிவியை இழந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரனார்.

இத்தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 9,710வாக்குகளையும் பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட 27 பேரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது. இன்று வெளியான சென்னை மண்டத்திற்குட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஜெயலலிதா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு குறைந்த அளவிலான மக்களை சந்தித்தே இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டாத தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றி சதவீதம் மிக குறைந்த அளவில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, அதிமுகவுக்கு 38.3 சதவீத ஆதரவு காணப்படுகிறது. திமுக கூட்டணிக்கு 37.7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 4.9 சதவீத ஆதரவை மக்கள் அளித்துள்ளனர். பாமக 1.7 சதவீத ஆதரவுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications