நகைக் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை.. நெல்லையில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் அருகில், நகைக்கடை உரிமையாளர் நாடு ரோட்டில் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் காதர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சிலர், அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அப்துல் காதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Jewellery shop owner murder at Nellai

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் நடந்த முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்துள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அப்துல் காதருக்கு யார் யார் முன்விரோதிகள் உள்ளனர் என்ற பட்டியலை தயார் செய்துள்ள மேலப்பாளையம் போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jewellery shop owner Abdul kathar murdered at Tirunelveli Melapalayam. Sensation there.
Please Wait while comments are loading...