ஜெ. மர்ம மரணம்- வரும் 25-ல் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை தொடங்குகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் வரும் 25-ந் தேதி விசாரணையை தொடங்க உள்ளது.

சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

Juustice Arumughaswamy Commission to begin Inquiry on Oct. 25

இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்தவர்களே நாங்கள் பொய் சொன்னோம் என பல்டி அடித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் முதல்வரான ஓபிஎஸ்ஸும் கூட இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்தது.

சென்னை எழிலகத்தில் விசாரணை கமிஷன் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் திங்களன்று முடிவடைய உள்ளது. இதையடுத்து புதன்கிழமையன்று விசாரணைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Juustice Arumughaswamy Commission which will probe of Jayalalithaa's death to begin the Inquiry on Oct. 25.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற