சென்னை கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே மீண்டும் மோதல்: 4 பேர் காயம்
சென்னை: சென்னை புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரனை நடந்து வருகிறது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் என்ற சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 18 வயதுக்குக் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்படுகின்றனர். 75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இருப்பினும் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மோதல் நடைபெற்ற இடத்தில் சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் லால்வீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மோதலில் தொடர்புடைய 6 சிறுவர்கள் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். கடந்த மாதம் இதேபோல் இங்கு நடந்த மோதலில் 32 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications